TAMIL


             💻கணினி💻


 கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி - கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை அறிவியல் மற்றும் சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி  மற்றும் விவசாயப் புரட்சிக்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.

பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார். இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு சார்லச்சு சேவியர் தாமஸ் அலுவலக பயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த அரித்மாமீட்டர் என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.





Comments

Popular Posts